அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து தெருவில் இறக்கி விட்ட தமிழ் இளைஞர் ! அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்த பரிதாபம்
தமிழகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தவிக்கவிட்டு ஓடிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேலா மரீன் நெல்சன்(35). இவருக்கும் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விமல், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய வேலையை இழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விமல் தன்னுடைய மனைவியை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
போதைக்கு அடிமையான மரீன் நெல்சன் அங்கிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அரைநிர்வாணத்துடன் சுற்றித் திரிந்துள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், அந்த பெண்ணை மீட்டு புதிய துணி ஒன்றை வாங்கிக் கொடுத்து உடுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் விமல் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்த பொலிசார், அந்த பெண்ணை தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.