ஆசியக்கிண்ணம் ! பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த ஆப்கானிஸ்தான் ! அபார வெற்றி

0

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபிதாபியில் நடைபெற்று வரும் 14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார்.இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நயீபும், ரஷித் கானும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 255 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ரஷித் கான் 32 பந்துகளில் 57 ரன்களுடனும், குல்பதின் நயீப் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அந்த அணியில் ஹஷ்மலுல்லா ஷாகிதி 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

வங்காளதேசம் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .இதையடுத்து 256 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய வங்காளதேச அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

Leave A Reply

Your email address will not be published.