ஆசிய கிண்ணத்தை இலங்கைக்கு பெற்று கொடுத்த தமிழச்சிக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு! படங்கள் இணைப்பு

0

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூர் அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி சாம்பியன் ஆனது . 9 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது .

ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு காரணமாக அமைந்தவர் தர்ஷினி என்ற தமிழ் வீராங்கனை ஆவார் .இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் .கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்தவர் .

தனது அசாத்திய திறமை மூலம் ஆசிய கிண்ணத்தை பெற்று கொடுத்த தர்ஷினி அவர்களுக்கு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் செலான் வங்கியினால் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது .

கிரிக்கெட் முதல் கொண்டு அனைத்து விளையாட்டுக்களிலும் தமிழ் வீர வீராங்கனைகள் திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் ஓர் தமிழச்சி ஆசிய கிண்ணத்தை பெற்று கொடுத்தமை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை . சர்வதேச ரீதியில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தர்ஷினி அவர்களுக்கு ஈழம் நியூஸ் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகின்றது .

Leave A Reply

Your email address will not be published.