ஆசிய கிண்ணம் 3 வது போட்டி ! இலங்கை ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை ! ஆப்கானிஸ்தான் 249 ஓட்டங்கள் குவிப்பு

0

14 வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்று வருகின்றது . இன்றைய தினம் மூன்றாவது போட்டி அபுதாபியில் தற்போது இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது .இதில் இலங்கை மற்றும் ஆபிசகானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டு இருக்கின்றன .
.
பகலிரவு போட்டியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்ஸ்கனிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து துடுப்பெடுத்தாடியது .

50 ஓவர்கள் முடிவில் ஆப்ஸ்கனிஸ்தான் அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுள்ளது .துடுப்பாட்டத்தில் ஆப்ஸ்கனிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் ஷாஹ் 90 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 72 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார் .இஹசனுல்லா 65 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 45 ஓட்டங்களை பெற்றார் .

பந்து வீச்சில் திசேர பெரேரா 9 ஓவர்கள் பந்து வீசி 55 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தினார் .தனஞ்சய 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டநேர இடைவேளையின் பின்னர் 250 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது .பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை படுதோல்வி அடைந்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.