இதுதான் தமிழர்கள் மேல் வீசப்பட்ட கொத்துக் குண்டுகள்!

0

தமிழர்கள் மேல் வீசப்பட்ட கொத்துக் குண்டுகள் (Cluster Bombs 18May2009 Genocide)உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள். இவை தான் இலங்கையில் 2008 மற்றும் 2009ல் வீசப்பட்டது. இந்தியா, அமெரிக்கா மற்றும் சில வல்லரசு நாடுகள் மட்டுமே CBU-105 வகை நவீன வகை சென்சார்க்கொண்ட கொத்து குண்டுகளை பயன்படுத்துகின்றன. 7ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிடம் 375 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்தியாவின் BL755 வகை மற்றும் ரஷ்யாவின் RBK-500 AO2.5-RT வகை கொத்து குண்டுகள் 2009ல் இலங்கையில் வீசப்பட்டன. இந்தியாவை தவிர வேறு யாரும் இலங்கை அரசுக்கு இந்த வகை குண்டுகளை அளிக்க வாய்ப்பு இல்லை…

http://www.dnaindia.com/…/report-india-strikes-deal-with-us…

https://www.theguardian.com/…/cluster-bombs-used-sri-lanka-…

http://www.bbc.co.uk/news/world-asia-17861187

http://www.washingtontimes.com/…/un-finds-cluster-bombs-s…/… உயரத்தில் இருந்து போர்விமானங்கள் மூலம் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுக் கொண்ட ஒரு பகுதியைக் குறிவைத்து ஒரு பெரிய குண்டு வீசப்படும். அதிலிருந்து வரும் பல நூறு சிறு ரசாயன குண்டுகள் பூமியில் விழுந்த நொடிப்பொழுதில் அதில் இருந்து வெளிவரும் வேதிவாயுக்கள் 10அடி உயரத்திற்கு பிராணவாயுவான Oxygenனை அப்புறப்படுத்தும்.

பின், ஒருவித அலறல் சத்தத்துடன் வெடித்து மக்களின் கண், காது, மூக்கு, வாய் என்று அனைத்து உறுப்புகளில் இருந்தும் இரத்தம் வெளிவந்து உடல்உறுப்புகள் தனித்தனியே சிதறுண்டு போகும்.படிப்பதற்கே நமக்கு இரத்தம் உறைகிறது என்றால் 2009இல் இந்த நாட்களில் NoFireZone என்று அழைக்கப்படும் போர் தடைச் செய்யப்பட்டப் பகுதியில் படுகாயங்களுடன் மருத்துவம் எடுத்துக்கொண்டிருந்த, பச்சிளங்குழந்தைகளுடன் பாதுகாப்பாக சரணடைய வந்த அப்பாவி மக்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் வீசிச் சென்றது இராணுவப்படை, நினைத்து பாருங்கள்.

இத்தனைக்கும் இலங்கையிடம் கொத்துக்குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் அப்போது துளியும் இல்லை. இதை இலங்கைக்கு வழங்கியது யார் என்று தெரியுமா?உலகில் கொத்துக்குண்டுத் தயாரிக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த 30 நாடுகளில் ஒன்றான, கொத்துக்குண்டுகள் இருப்பு வைத்திருக்கும் 60 நாடுகளில் ஒன்றான, தெற்காசியாவிலே கொத்துக்குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் ஒரே நாடான இந்தியா மட்டும் தான். ஒருவேளை இனப்படுகொலைத் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படுமானால் இந்தியாவின் முகத்திரைக் கிழித்தெறியப்படும்.2012களில் United Nations Development Programme (UNDP) கொடுத்த ஆய்வின்படி வடக்கில் யாழ்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பச்சிளப்பள்ளி சுற்றிய பகுதியில் 42 கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது.

கொத்துக்குண்டுகளை தயாரிக்கும், வைத்திருக்கும் மற்றும் பயன்ப்படுத்திய நாடுகளின் பட்டியல் பின்வருமாறு, அதில் பயன்ப்படுத்திய நாடுகளின் பட்டியலில் மட்டும் உள்ள இலங்கை.

Leave A Reply

Your email address will not be published.