அண்மையில் இந்தியாவிற்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ.
தனது நெருங்கிய இந்திய நண்பனான சுப்ரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் டெல்லி சென்று இலங்கை – இந்தியா என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
அத்துடன் ராகுல்காந்தி, நரேந்திர மோடி உட்பட இன்னும் சிலரைச் சந்தித்தது மட்டுமன்றி பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய ஊடகமான தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில்,
இறுதி யுத்தம் தொடர்பிலும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பிலும் , தமிழர்களைப் பற்றிய மஹிந்தவின் எண்ணக்கரு என்ன, ராஜீவ் காந்தி கொலை வழக்கு இலங்கைக் குற்றவாளிகள் விடுதலை பெறும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற அனுமதிப்பீர்களா…. என பல்வேறான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.