இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலோ மத்தியூஸ் அதிரடியாக நீக்கம் ! ஒருநாள் ,T20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு ?
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலோ மத்தியூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் .ஆசிய கிண்ணத்தில் ஏற்பட்ட படுதோல்வியே மத்தியூஸ் நீக்கப்பட்டமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது .
14 வது ஆசிய கிண்ண போட்டிகள் டுபாயில் இடம்பெற்று வருகின்றது .பங்களாதேஷ் மற்றும் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது .இதனால் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டு நாடு திரும்பியது . இலங்கை அணி வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தினால் இலங்கை ரசிகர்கள் கடுமையான கோபத்திற்குள்ளாகியுள்ளார்கள் .சமூக வலைத்தளங்களில் இலங்கை அணியின் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருவதுடன் மீம்ஸ் வெளியிட்டு கிண்டல் செய்தும் வருகின்றனர் .
அஞ்சலோ மத்தியூஸ் நேற்று இரவு தனது தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார் .இதன் காரணமாக மத்தியூஸ் இராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார் .இலங்கை கிரிக்கெட் சபை தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மத்தியூஸ் தெரிவித்துள்ளார் .
மேலும் , ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருப்பது போட்டிகளில் விளையாட தகுதி இல்லையென்று அணியின் தேர்வாளர்கள் கருதினால் ஓய்வு பெற தயாராக இருப்பதாக மத்தியூஸ் தெரிவித்துள்ளார் .படு பாதாளத்தில் விழுந்துள்ள இலங்கை அணியை மீட்டெடுக்க அடுத்த தலைவராக யாரை இலங்கை கிரிக்கெட் சபை நியமிக்க போகின்றது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள் .