ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம்(25) விருந்துபசாரம் வழங்கினார்.
இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டார்.இதன்போது, இலங்கை ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதியும் தமது வாழ்க்கைத் துணைவியருடன் ஒளிப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.