உனக்கு 65 எனக்கு 20 ! 20 வயது மாணவியை காதலித்து திருமணம் செய்த 65 வயது ஆசிரியர் ! நல்லா வருவிங்கடா

0

இந்தியாவின் பஞ்சாப்பில் 20 வயது மாணவி ஒருவரை 65 வயது தலைமை ஆசிரியர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன்(65). இவர் ஒரு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகத்(20) என்ற மாணவி டியூசன் படித்து வந்தார். ஜெயக்கிருஷ்ணன் மாணவிக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.

இதனால் மாணவிக்கு ஜெயக்கிருஷ்ணன் மீது ஈர்ப்பு வந்துள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவருமே எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அதிர்ந்துபோன மாணவியின் பெற்றோர், ஜெயகிருஷ்ணன் தனது மகளைக் கடத்திவிட்டதாகப் பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்துப் பொலிஸார் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைத் தேடி வந்த நிலையில் அவர்கள் இராமேஸ்வரத்தில் ஜோடியாக சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இராமேஸ்வரம் பொலிஸார் இருவரையும் கண்டுபிடித்தனர். பஞ்சாப் பொலிஸாரோடு மாணவியின் தந்தை இராமேஸ்வரத்திற்கு வந்தார்.அவர்களைப் பிடித்து விசாரித்ததில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறினர்.

இதனைக் கேட்ட மாணவியின் தந்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து அவர்கள் இருவரும் பஞ்சாப் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.