உயிரோட இருக்கிற தலைவரிட்ட அனுமதி வாங்கிட்டியள்…மாவீரர்களிடம் எப்போ அனுமதி வாங்க போறிங்க? ஓர் போராளி கேட்ட கேள்வி அதில் ஆயிரம் அர்த்தம் !

0

#நான்_தலைவருக்காக_போராடவில்லை_போராளிகளிடம்_அனுமதி_வேண்டிக்கொண்டு_வாங்கோ….!!!

#உண்மை_சம்பபவம்….!!!

கனடாவில் வசிக்கும் ஈழத்து பணக்கார குடும்பம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் தொழில் செய்கின்ற குடும்பம்.அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூன்றும் ஆண்மக்கள்.இரு பிள்ளைகள் தாய் தந்தையுடன் கனடாவில் வசிக்கின்றனர்.கடைக்குட்டி நாட்டுக்காக இயக்கத்தில் இணைந்து கடமையாற்றிக் கொண்டிருந்தவர்.

இந்நிலையில் இப்போராளியின் பெற்றோர் பலமுறை தன்மகனுக்கு விரும்பி எழுதினர் “நீ கனடாவுக்கு வா இங்கு வந்து இயக்க வேலைகளை செய்” என்று பலமுறை தங்களுடைய கடைசி மகனுக்கு கடிதம் மூலமாக இடைவிடாது எழுதி வலியுறுத்தினர்.ஆயினும் மகன் தாய் தந்தை சொல்வதை கேட்பதாக இல்லை.தமிழீழமே உயிர்மூச்சென்று களப்பணியாற்றுகின்றார்.

ஆயினும் அப்போராளியின் பெற்றோர் கடைசிமகன் மீதுள்ள அளவற்ற பாசத்தால் சமாதான காலத்தில் நேரடியாக தமிழீழத்திற்கே சென்று தலைவரை சந்தித்து எடுத்து கூறுகின்றனர் “அவன் இங்க நிப்பதைவிட கனடா வந்தால் இங்கிருப்பதைவிட விடுதலைக்காக அதிகப்படியான பணிகளை செய்யலாம்.நாங்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவோம்” என்று தலைவரிடம் சொல்லுகின்றனர்.இப்பெற்றோர் தவிப்பை உணர்ந்த அண்ணண் அப்போராளி கனடா செல்வதற்கான தனது அனுமதியை எழுத்து மூலமாக எழுதி அப்பெற்றோரிடம் கொடுக்கின்றார்.உள்ளப் பூரிப்புடன் கண்ணீர் மல்க தலைவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அனுமதி கடிதத்துடன் தங்கள் ஆசைமகனை காண விரைகின்றனர்.தலைவரே சொல்லிட்டார் மகன் தட்டமாட்டான் எப்படியும் நம்மோடு கனடா வந்திடுவார் என்ற நம்பிக்கையோடு இருவரும் செல்கின்றனர்.

மகனை சந்தித்து “தலைவரே சொல்லிட்டார் எப்ப புறப்படலாம் தம்பி” என்று கேட்க ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மகன் “குறையா நினைக்காதீங்க உயிரோட இருக்கிற தலைவரிட்ட அனுமதி வாங்கிட்டியள் தமிழீழ கனவை சுமந்து களமாடி வீரச்சாவை தழுகிகொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களிடம் எப்போ அனுமதி வாங்க போறியள்”என்று கேட்க இதைகேட்ட அப்போராளியின் பெற்றோர் திகைத்துவிட்டனர் அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.அப்போராளி மேலும் “நான் போராடுறது தலைவருக்காக அல்ல அவரது தலைமையில் தமிழீழத்திற்காகவும் அந்த இலட்சியதிற்காக உயிர்கொடை கொடுத்த போராளிகளின் கனவு தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் களத்தில் நிக்கின்றேன்.முதலில் அந்த ஆயிரமாயிரம் போராளிகளின் ஆத்மாவிடம் அனுமதி வேண்டிக்கொண்டு வாங்கோ பிறகு நான் உங்களோடு வருகின்றேன்” என்று கூறிய தன் செல்ல மகனை வாரி அணைத்து முத்தம் கொடுத்த அப்பெற்றோர்.பெருமையுடன் கண்ணீர் மல்க நாங்கள் போகின்றோம் என்றுகூறி சிறிதுதூரம் நடந்துவிட்டு அந்ததாய் “இனி காண கிடைப்பானோ இல்லையோ” என்று கண்ணீருடன் மீண்டுமொருமுறை கட்டியணைத்து முத்தமிட்டு அழுதுகொண்டே கனடா திரும்பி சென்றனர்.

ஒன்றா இரண்டா எத்தனை ஆயிரம் தியாகங்களால் இந்த விடுதலைபோரை வளர்த்தோம் அவையனைத்தும் வீணாகிடகூடாது.செந்நீரில் வேர்பிடித்த ஈழமரம் மீண்டும் துளிர்க்கும்.தியாகங்கள் உள்ளிருந்து உயிர்நீர் ஊற்றும்.விடுதலையின் பாடலை ஒருநாள் எம்மக்களின் நாவுகள் முழங்கும்.

Leave A Reply

Your email address will not be published.