உலகில் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இரண்டு உத்தமர்கள் ! ஒருவர் தலைவர் பிரபாகரன் ! மற்றையவர் திலீபன்

0

உலகில் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் , சுதந்திர விடுதலைக்காகவும் பல போராட்ட வீரர்கள் அகிம்சை வழியில் போராடியிருக்கின்றார்கள் .உண்ணா விரதம் இருந்துள்ளார்கள் .இந்தியாவின் மாகாத்மா காந்தி , ஐரிஷ் நாட்டினை சேர்ந்த போராட்ட வீரன் பொபி சாண்ட்ஸ் போன்றோர் தண்ணீர் அருந்தி தான் உண்ணா விரதம் இருந்தார்கள் .

உலகில் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள் இருவர் தான் .அவர்கள் வேறு யாருமல்ல .இரண்டு தமிழர்கள் .ஒருவர் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் .மற்றையது தலைவர் வளர்த்து எடுத்த தளபதி தியாகி திலீபன் அவர்கள் .

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் தலைவர் பிரபாகரன் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியது .அதனை கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை தலைவரையே சாரும்.

தலைவர் தண்ணீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்து இரண்டாம் நாளே இந்திய அரசு மீண்டும் தகவல் தொடர்புச் சாதனங்களை கையளித்தது. அதன் காரணமாக தலைவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறுத்தி கொண்டார் .

Leave A Reply

Your email address will not be published.