ஒருவரை தவிர அனைத்துப் புலிகளையும் விடுதலை! யார் அந்த ஒருவர்?

0

இறுதி யுத்தத்தில் சரணடைந்த 12,191 விடுதலைப்புலிகளில் ஒருவரை தவிர ஏனைய அனைவரையும் விடுதலை செய்துவிட்டோம்: இரா
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரண் அடைந்த 12,191 பேரில் ஒருவரை தவிர அனைய அனைவரையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துவிட்டதாக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் அசேல ஒபயசேகர தெரிவித்துள்ளார்.

12190 பேரை புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைத்துவிட்டுள்ளதாகவும் ஒருவர் மட்டுமே இன்னமும் வவுனியா முகாமில் இருப்பதாகவும் பூந்தோட்டம் முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட 3 முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் கூறினார்.

இவாறு விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கள் , மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கல்வி வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாகவும் இந்த வருடம் மட்டும் இதற்கு 26 மில்லியன்கள் செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். இதுவரையில் விடுவிக்கப்படாத அந்தப் விடுதலைப் புலி உறுப்பினர் யார் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.