ஓடும் பேருந்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நடத்துனர் ! அதிர்ச்சி செய்தி

0

நுவரெலியாவில் தனியார் பேருந்துக்குள் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரினால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரம்பொட பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தென்னகோன் என்ற சாரதி மற்றும் கந்தபளை பிரதேசத்தை சேர்ந்த காசி விஷ்வநாதன் என்ற 31 வயதான நடத்துனருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவி தங்கியிருக்கும் அறைக்கு செல்வதற்காக இந்த பேருந்தில் ஏறியுள்ளார். இந்த மாணவி குறித்த பேருந்தில் கண்டி வரைக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் நுவரெலியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு முழுவதும் மாணவியை பேருந்துக்குள் தடுத்து வைத்திருந்து அடுத்த நாள் விடுவித்துள்ளளதாகவும் தெரிவந்துள்ளது.

பின்னர் குறித்த மாணவி சம்பவம் தொடர்பில் தனது தாயாருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.