கடலில் மிதந்த பெண் விரிவுரையாளரின் சடலம் ! கிழக்கு பல்கலைக்கழத்தில் பதற்றம்

0

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய சடலம் சங்கமித்த கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – ஆசிகுளம் இலக்கம் – 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடராசா போதநாயகி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் வசித்து வந்த குறித்த விரிவுரையாளர் விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு முச்சக்கர வண்டியில் சென்றதை பல்கலைக்கழகத்தின் காவலாளிகள் அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இருந்து குறித்த பெண் விரிவுரையாளருடைய பை மற்றும் செருப்பு போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.தற்போது குறித்த விரிவுரையாளரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.