கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது கன்னி வெடி வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மரணம் அடைந்துள்ளார் .
கடந்த மூன்றாம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்வரும் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் ஏற்கனவே ஒரு இளைஞர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது .
விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் மனைவிமாரும் கர்ப்பிணிகள்.என்பது குறிப்பிடத்தக்கது ,