அரசியலில் முட்டி மோதும் மூன்று பேர்கள் ஒரே இடத்தில் அதுவும் சாமியார் ஒருவருடன் காணப்படும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கருணா, ஹிஸ்புல்லா, அரியனேத்திரன் மூவரும் காணப்படும் புகைப்படமே அது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை ஒடுக்குவதில் கடுமையாக செயற்பட்ட அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன், அவருடன் முரண்படும், இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர். புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதி கருணா அம்மான் மற்றும் முன்னாள் எம்.பி அரியனேந்திரனும் இவ்வாறு காணப்படுகின்றனர். இது எப்போது? எங்கு நடந்த சந்திப்பு என்று பலரும் வினவி வருகின்றனர்.