கள்ள காம வெறிக்காக குழந்தைகளை கொன்ற கொடூர பாதகி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற கண்கொள்ளா காட்சி ! சிசிடிவி காணொளி இணைப்பு

0

தமிழ்நாட்டின் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளையில் வசித்து வந்த விஜய் – அபிராமி தம்பதிக்கு, 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் பிரிவில் வேலைபார்த்து வந்த விஜய், கூடுதல் பணி காரணமாக வங்கியிலேயே தங்கியுள்ளார். சனிக்கிழமை காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி குழந்தைகள் இருவரும் படுக்கையில் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளார் விஜய்.

குழந்தைகளின் உடலை மீட்ட குன்றத்தூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தாய் அபிராமி தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், இன்று அபிராமியின் செல்போன் சிக்னல் நாகர்கோவிலில் கிடைத்ததையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். கள்ளக்காதலன் சுந்தரம் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் அபிராமி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடிய சிசிடிவி-யின் வீடியோ காட்சியையும் போலீசார் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.