காக்கிச் சட்டைக்காரர்களின் கண்களை கலங்க வைத்த சிறுமிகள் ! படங்கள் இணைப்பு

0

இலங்கை பொலிஸாரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 152வது ஆண்டு பொலிஸ் விழாவை கொண்டாடும் முகமாக ஹெம்மாதகம பொலிஸார் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் .

அதற்கமைய குறித்த பொலிஸார், மாவனெல்ல அஷோகபுர சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவர்களுக்காக காலை உணவு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.அந்த இலத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அங்குள்ள பிள்ளைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட்டுள்ளனர்.

ஊனமுற்ற 85க்கும் அதிகமானோர் அந்த இல்லத்தில் உள்ள நிலையில், அங்கு பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்களை பார்க்க முடிந்துள்ளது.காக்கி சீரூடையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரிகள், தனியாக சாப்பிட முடியாத பிள்ளைகளுக்கு உணவு ஊட்டியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் கண்களின் கண்ணீரையும் அவதானிக்க முடிந்துள்ளது. உணவு வேளையின் பின்னர் இந்த அதிகாரிகள் குறித்த சிறுவர்களை அரவணைத்து நெருக்கமாக இருந்ததனையும் பார்க்க முடிந்துள்ளது.குறித்த இல்லத்தில் வாழும், சவினா சாவிந்தி என்ற 5 வயதுடைய சிறுமியே அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் 11 வயதான தினுஷா என்ற சிறுமி தனது வாயினால் சித்திரம் ஒன்றை வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.