காத்தான்குடியில் இங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களினால் நாட்டுக்கு பெரும் ஆபத்து என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பு, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்கட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ. எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அமைச்சருடன் நெருங்கிய தொடர்பை வைத்து வருகின்றார். இதேவேளை, ஐ. எஸ் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக வைத்துகொண்டு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.