கிளிநொச்சியில் கோர விபத்து ! ஐவர் கவலைக்கிடம் ! படங்கள் இணைப்பு

0

கிளிநொச்சி – கரடிபோக்கு சந்திக்கு அண்மையில் உள்ள பண்ணை ஒன்றுக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.முறிகண்டிப் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மினி பஸ் ஒன்று பண்ணைப் பகுதியாக செல்லும் போது, திடீரென குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்றுடனும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிள் சாரதியின் நிலையே கவலைக்கிடமாக இருப்பதாகவும், மாடு ஒன்று உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.