செங்குருதி படிந்த மண்ணில் நடிகை ஓவியாவுக்கு செங்கம்பள வரவேற்பு ! சினிமா பைத்தியம் இலங்கை தமிழர்களுக்கும் தொற்றி விட்டதா ?படங்கள் உள்ளே

0

ஓவியாவுக்காக செட்டித்தெருவில் கூடிய கூட்டம்-கொழும்புத்தமிழனின் பரிதாபநிலை.

பிக்பாஸ் புகழ் ஓவியா நேற்று கொழும்பில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

நடிகை ஓவியாவுக்கு நகைக்கடை சார்பில் செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. ஓவியாவை பார்ப்பதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஈ மொய்ப்பது போன்று பெருமளவில் திரண்டிருந்தனர் .  ஓவியாவை வைத்து காசு பார்க்கும் பலே ஐடியாவை போட்ட நகைக்கடைக்காரர்கள், தங்களிடம் நகை வாங்குபவர்களில் குலுக்கல் மூலம் தெரிவாகுபவர்கள் இன்று ஓவியாவுடன் உட்கார்ந்து உணவருந்தலாம் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருந்தது .

சிங்கள பேரினவாதிகளுடனான 30 வருட போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து ,உடமைகளை இழந்து , கண் , கை கால்களை இழந்து ஒரு நேர உணவுக்கு முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் அவதிப்படும் நிலையில் ஓவியாவுக்கு செங்கம்பள வரவேற்பு தேவை தானா என்று மக்கள் விசனம் அடைந்துள்ளார்கள் .

இதுவரை காலமும் இலங்கை தமிழர்கள் சினிமா பைத்தியமாக இருந்ததில்லை . சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்த்தனர் .நடிகர் நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதில்லை .கடவுளாக பார்த்ததில்லை . பால் அபிஷேகம் பீர் அபிஷேகம் செய்து பித்தலாட்டம் ஆடவில்லை . ஆனால் 2009 ம் ஆண்டு விடுதலை புலிகளின் ஆட்சி அழிக்கப்பட்ட பின்பு இலங்கையிலும் சினிமா பைத்தியம் ஏற்பட்டுள்ளது .சினிமா பைத்தியங்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதனை ஓவியாவின் வருகை எடுத்துக்காட்டுகின்றது .

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது சாதிக்க வேண்டிய இளைஞர்கள் யுவதிகள் சினிமா பைத்தியங்களாக மாறி வருகின்றமை மிகுந்த கவலைக்குரிய விடயம்..

 

 

Leave A Reply

Your email address will not be published.