தந்தை ஓட்டிய உழவியந்திரத்தின் சில்லினுள் நசிந்து பச்சிளம் குழந்தை பரிதாப பலி ! யாழ்ப்பாணத்தில் நடந்த சோகம்
யாழ். மல்லாகம் கல்லாரைப் பகுதியில் தந்தையார் செலுத்திய உழவியந்திரத்தின் சில்லுக்குள் சிக்குண்டு ஒன்றரை வயதான பச்சிளம் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று(23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த உழவியந்திரத்தைக் குறித்த குழந்தையின்தந்தையார் வேலைநிமிர்த்தமாக வெளியே செல்வதற்காக இயக்கியுள்ளார். இந்நிலையில் உழவியந்திரத்தின் சத்தம் கேட்டு வீட்டினுள்ளே இருந்த குழந்தை வெளியே வந்துள்ளது.
இதனைச் சற்றும் எதிர்பாராத தந்தை குழந்தை வெளியே வந்ததை அறியாமல் உழவியந்திரத்தைப் பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.
இதன்போது உழவியந்திரத்தின் சில்லினுள் அகப்பட்ட குழந்தை நசிவடைந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கனவே குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இதேபகுதியைச் சேர்ந்த விஜயகாந் சஸ்மிதன் என்ற பச்சிளம் பாலகனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் மல்லாகம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.