தமிழை கணனிப் பயன்பாட்டுக்கு கொண்டுவர புலிகளுக்கு உதவியவர் காலமானார்!

0

இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணினிப் பயன்பாட்டுக்கு வந்தது.அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார்.

1989களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை புலம்பெயர் நாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர்.போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சிகளில் இறங்கினர்.

அப்போதுதான் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் தன்னிடம் இருந்த திட்டத்தை விடுதலைப் புலிகளின் கனடாப் பொறுப்பாளர் ‘தொண்டைமானாறு’ குணம் அவர்களிடம் தெரிவித்தார். அத்திட்டத்திற்கு கணனிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பெரும் நிதிதேவைப்பட்டது. இத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும் அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளருமான திரு.லோறன்ஸ் திலகர் அவர்களிடம் தெரிவித்து தலைமைப் பீடத்திடம் நிதி பெற ஆவன செய்தார் பொறுப்பாளர் குணம் அவர்கள்.

எழுத்துரு அமைக்க தமிழர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் கனடிய அலுவலகத்தில் பணி நடைபெற்றது. வரைகலை கலைஞர்கள் திரு. பா. ஞனபண்டிதன், கரன் கிறாப் சசி, தவம்… போன்ற பலரின் உதவியோடு, சரஸ்வதி, ஓளவை, கீதவாணி, பூபாளம்,திருமலை. நாகந்தினி..போன்ற எழுத்துருக்கள் அமைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கனடா நாட்டுக் கிளையின் வெளியீடான ‘உலகத்தமிழர்;’ ஏடே இவ்வெழுத்துக்கள் கொண்டு வெளிவந்த உலகின் முதல் கணினி அச்சேறிய தமிழ் ஏடு ஆகும். இவற்றுக்கெல்லாம் அறிவுக் கருவூலமாக இருந்தவர் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் ஆகும்.இவரின் மறைவு பேரிழப்பாகும். அன்னரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
———
நன்றி..
வெளிச்சவீடு.காம்

Leave A Reply

Your email address will not be published.