தவற விடப்பட்ட ஒரு இலட்சம் பணத்தினை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை உள்ளம் ! இந்த காலத்தில் இப்படியும் நேர்மையான மனிதரா?

0

வெளியூரிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபர் ஒருவர் அவருடைய ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் வாகனசாரதி அனுமதி பத்திரத்தை தவற விட்டு சென்றுள்ளார். அதை ஐயா ஒருவர் எடுத்து குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில் வெளியூரிலிருந்து திருகோணமலை நகருக்கு சுற்றுலா வந்த ராஜேந்திரம் தாஜன் எனும் தமிழ் இளைஞரின் ஒரு இலட்சம் பணம் உட்பட வாகனசாரதி அனுமதி பத்திரத்தை தவற விட்டு சென்றவரின் ஆவணங்களையும் பணத்தையும் ஐயா ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

பின் குறித்த நபரிடம் அதை ஒப்படைத்து தமது கன்னியத்தை நேர்மையையும் வெளிக்காட்டி சகலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

மேலும் குறித்த நபர் கூறுகையில், நன்றி ஐயா இக்காலத்தில் உங்கள் மாதிரி நேர்மையான குணாதிசியம் கொண்டவர்கள் வாழ்வது குறைவு உங்களை போல ஒரு சிலபேர் வாழ்வதால்தான் தமிழினத்தின் மாண்பு காப்பாற்றப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.