தியாக தீபம் திலீபனை அவமதித்த துரோகி சுமந்திரன் ! இளைஞர்கள் கொந்தளிப்பு ! படங்கள் இணைப்பு

0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகமெங்கும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது .வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சுத்துமாத்து சுமந்திரன் கரவெட்டி பிரதேசசபையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தியாகி திலீபனுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தி நாடகமாடியுள்ளார் .இதனால் உணர்வுள்ள இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளார்கள் .

பன்னிரண்டு நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணா விரதம் இருந்து இந்திய அரசாங்கத்துக்கு அகிம்சை என்றால் என்ன என்று போதித்த ஒரு தூய்மையான மாபெரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சுமந்திரனுக்கு என்ன அருகதை உள்ளது ?

தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக குள்ள நரி ரணிலினால் திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் தான் சுமந்திரன் .விடுதலை புலிகளில் இணைந்தவர்கள் அனைவரும் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று பகிரங்கமாக கூறியவர் தான் இந்த சுமந்திரன் .

இலங்கையில் இன அழிப்பு இடம்பெறவில்லை என்று தெரிவித்து சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தவர் இந்த சுமந்திரன் .அண்மையில் கூட காலியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் தமிழர்களுக்கு சமஸ்டி ஆட்சி அவசியம் அற்றது என்று தெரிவித்திருந்தார் .

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுந்தந்திர தமிழீழம் மலரட்டும் என்று கூறிய ஒரு புனிதமான தியாகியை சுமந்திரன் இன்று அஞ்சலி செலுத்தி அவமதித்துள்ளார் .இதை விட திலீபன் அண்ணாவை அவமதிக்க முடியாது .

நீங்கள் தமிழீழம் அமைப்பதை நான் எனது 650 தோழர்களுடன் வானத்தில் இருந்து பார்த்து மகிழ்வேன் என்று கூறி பல கனவுகளுடன் உயிர் துறந்த ஒரு மாபெரும் மாவீரனுக்கு சுமந்திரன் என்ற துரோகி அஞ்சலி செலுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது .மக்களை இதற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும் .

தனக்கு கிடைத்த மருத்துவ படிப்பை தூக்கி எறிந்து விட்டு தலைவருடன் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடி இறுதியில் அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தி 12 நாட்கள் பட்டினி கிடந்து வெறும் 23 வயதில் வீரச்சாவு அடைந்த திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சம்பந்தன் , சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய பாதையில் இருந்து விலகி சிங்கள பேரினவாதிகளுக்கு நக்கி பிழைக்கும் எவருக்கும் உரிமை இல்லை .

Leave A Reply

Your email address will not be published.