திருமணத்தின் போது மணமகனின் காலில் விழுந்து உயிரிழந்த மணமகள் ! மனதை உருக்கும் சம்பவம்

0

தெலுங்கானாவில் திருமண முடிந்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மணமகள், மணமகன் காலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கும் மெகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது.

பல கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை துவங்க நினைத்த அந்த புதுமணத் தம்பதியினரின் நினைப்பு நிலைக்கவில்லை. திருமணம் முடிந்தபின் தம்பதியினர் வானத்தை நோக்கி அருந்ததி நட்சத்திரம் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென லட்சுமி மணமகன் காலில் சுருண்டு விழுந்து மயங்கினார்

இதனால் அதிர்ந்துபோன உறவினர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்த்னர். லட்சுமி மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவத்தால் திருமண வீட்டார் சோகத்தில் ஆழ்ந்தனர். திருமணமான நொடிப்பொழுதில் மணமகள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.