திருமணப்பரிசாக மணமக்களுக்கு பெற்றோல் வழங்கிய வினோத சம்பவம் ! மோடியின் மூக்கில் நச்சென்று குத்திய நிகழ்வு ! படங்கள் உள்ளே

0

கடலூர் அருகே நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் விதமாக, குறும்புக்கார நண்பர்கள் செய்த இந்த செயல், நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய வெகு ஜன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. வெறுமனே கையை கட்டி கொண்டு, வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.

இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீச தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.

இந்த சூழலில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒரு படி மேலே போய் விட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், மத்திய அரசையும் இதை விட வேறு யாராலும் கிண்டல் அடிக்க முடியாது.

கடலூர் மாவட்டம் குமராட்சியில், இளஞ்செழியன்-கனிமொழி ஆகியோரின் திருமணம், நேற்று (செப்.16) நடைபெற்றது. மணமகன் இளஞ்செழியனின் நண்பர்கள் சிலர், திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களின் கையில், 5 லிட்டர் பெட்ரோல் இருந்தது.

நேராக மேடைக்கு ஏறிய இளஞ்செழியனின் நண்பர்கள், 5 லிட்டர் பெட்ரோலையும் திருமண பரிசாக மணமக்களுக்கு வழங்கினர். மணமக்களுக்கு பெட்ரோலை திருமண பரிசாக வழங்கியவர்களில் பிரபு என்ற மாணவரும் ஒருவர். இவர் சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

இதுகுறித்து பிரபு கூறுகையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே நான் உள்பட இளஞ்செழியனின் நண்பர்கள், மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்க முடிவு செய்தோம். பெட்ரோல் விலை உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கம் என்றார்.

இந்த குறும்புக்கார இளைஞர்களின் குசும்பான செயல், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து மணமக்களின் தோழியான தீபா என்பவர் கூறுகையில், ”பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, சாமானிய மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிக்காட்ட விரும்பினோம். எங்களின் பரிசை மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.

முன்னதாக திருமணத்திற்கு பெட்ரோல், டீசலை பரிசாக வழங்கலாம் என்பது போன்ற மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருந்தன. தற்போது அது உண்மையாகியுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தை மையமாக வைத்தும், மீஸ்கள் வர தொடங்கி விட்டன. தமிழ்நாட்டுக்காரங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்.

Leave A Reply

Your email address will not be published.