திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் ! உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற சென்ற தியாகி திலீபனிடம் தலைவர் கூறியது
அமைதிப்புறா வடிவில் நுழைந்து தமிழர் தாயகத்தில் அடாவடி புரிந்த இந்திய அரசாங்கத்திற்கு எதிராக உண்ணா விரதம் இருக்க முடிவு செய்த தியாகி திலீபன் அவர்கள் 1987 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம் திகதியாகிய இன்றைய தினம் உண்ணாவிரதம் இருப்பதற்கான அனுமதியை பெறுவதற்காக தலைவரை சந்திக்க சென்றார் . தனது உண்ணா விரதம் தொடர்பான முடிவை தலைவரிடம் திலீபன் அவர்கள் தெரிவித்த போது தலைவர் ” திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகின்றேன் என்று வழியனுப்பி வைத்தார் .
நூற்றுக்கணக்கான போராளிகளை மட்டுமே கொண்டிருந்த அன்றைய கால விடுதலைபுலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர் தியாகி திலீபன். தான் வளர்த்து எடுத்த ஒரு தளபதி சாகும் வரை உண்ணா விரதம் இருக்க போகின்றேன் என்று கூறிய போது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நானும் பின்னால் வருகின்றேன் என்று கூறிய ஒப்பற்ற தலைவர் தான் எமது தலைவர் .தனது உயிரை பற்றி சிறிதளவு கூட அக்கறை கொள்ளாத ஒரு மாபெரும் பொக்கிஷமாகிய தலைவனை நாம் இன்று தொலைத்து விட்டோம் என்னும் போது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் குற்ற உணர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது.