துரோகத்தால் அழிக்கப்பட்டாய்! விரிவுரையாளர் மரணவீட்டில் நீதிகோரி குடும்பத்தினர் போராட்டம்.

0

கடந்த 22.09.2018 அன்று திருகோணமலை கடலில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிச்சடங்கு இன்று வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் இடம்பெற்றபோது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் ஒன்றினைந்து நீதி கோரி போராட்டம். ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

இதில் போதநாயகி நம்பிக்கை துரோகத்தால்த்தான் உயிரிழந்தார் என்ற தொனிப்படவும் திருமணத்தில் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்ற கருத்துப்படவும் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மரணச்சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் போதநாயகியின் குடும்பத்தின் மனக்குமுறலை கேட்டு கண்ணீர் விட்டதுடன் கடும் கோபத்திலும் காணப்பட்டனர்.

தும்புமிட்டாயும் மாங்காயும் விற்று மகளை கற்பித்து ஒரு சிறந்த கல்வியாளராக உருவாக்கிய பெற்றோர் தமது மகள் தனது பெயர் புகழ் பணம் அனைத்தையும் யாருக்கோ தாரைவார்த்துவிட்டு கடன்காறியாக சடலமாக மீண்டிப்பதை உனர்ந்த அயலவர்கள் ஆறாத்துயரினால் அநீதிக்காக குரல்கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த இறுதிச்சடங்கில் போதநாயகியின் கணவர் செந்தூரனோ அல்லது அவர்களது உறவினர்களோ கலந்துகொள்ளவில்லை என்பதோடு சில அமைப்புக்களால் கட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளில்கூட கணவரான செந்தூரனின் பெயரை தவிர்த்து தந்தையான நடராசாவின் பெயரையே பாவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.