தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்த கருத்து ! எதிரிக்கும் இவர் கொள்கை பிடிக்கும்
1993 ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச இறந்த பின்பு 1994 ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறுகின்றார். 1995 ம் ஆண்டு விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார். இலங்கை பேரினவாத அரசு மற்றும் தமிழீழ விடுதலை புலிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை இறுதியில் தோல்வியில் முடிந்தது .பேரினவாதிகளின் திட்டமிடப்பட்ட ஒரு நாடகமே இந்த பேச்சுவார்த்தை .
புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்த கருத்து கீழே…..கொண்ட கொள்கையில் மாறாத தலைவனை பற்றி எதிரி கூறிய கருத்து……
“சமாதான காலகட்டத்தில், பிரபாகரனும் நானும் சுமார் 42 அல்லது 43 கடிதங்கள் பரிமாறினோம். அதனூடாக அவர் ஈழத்தை தவிர வேறு எதனையும் கோரப்போவது இல்லை என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. அவர் தன் பிடியில் இருந்து ஒருபோதும் தளர்ந்தது கிடையாது.
மிகவும் கண்டிப்பான கடிதங்களையே நான் பெற்றுவந்தேன் என்கிறார். ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால் தன் கொள்கையில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் எப்பொழுதும் மாறியதே இல்லை என்றே கூறலாம் என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார் .