நல்லூர் உற்சவத்தில் கைக் குழந்தையுடன் விற்பனையில் ஈடுபடும் பெண்கள்!!!

0

நல்லூர் உற்சவ காலத்தின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டபட்டுள்ளது.

வவுனியா உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள் சிறுவர்களுடன் ஊதுபத்திகளை விற்பனை செய்வதோடு யாசகம் மற்றும் மடிபிச்சை எடுக்கிறார்கள் என கடமையிலிருந்த யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வரியிறுப்பாளர்கள் மற்றும் பொலிஸாரிடமும் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் பெண் ஒருவரிடம் வினாவிய போது,
“நாங்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நல்லூர் உற்சவ காலத்தில் வியாபார நோக்குடன் வந்து யாழ் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஊதுபத்தி விற்பனை செய்து வருகிறோம்.

இரவு விற்பனை முடிந்ததும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து விடுதிக்கு செல்வோம்” என தெரிவித்தார். ஏத்தனை பேர் வந்தீர்கள் யார் இங்கு அழைத்து வந்தார்கள் போன்ற மேலதிக கேள்விகளுக்கு குறித்த பெண் பதிலளிக்காமல் தனது வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் ஒரு குழுவாகவே வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ளார்கள். இவ்வாறு விற்பனையில் ஈடுபடுபபவர்களை அழைத்து வந்து இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுத்துபவர்கள் யார்? என்பது கண்டறியப்படவில்லை

Leave A Reply

Your email address will not be published.