நல்லூர் பிரதேச சபைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி இல்லை!

0

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம்

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாக்கிழமை சபை மண்டபத்தில் நடைபெற்றது,

அதன் போது ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கு. மதுசுதன், சைவ சமய விழுமியங்களை பேணும் வகையில், பசுவதைகளை தடை செய்யும் முகமான பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டும்.

அத்துடன் சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்ட மாட்டிறைச்சி கடைகளை, மாட்டிறைச்சி விற்பனை கடையாக குத்தகைக்கு கொடுக்க கூடாது. என சபையில் தீர்மானத்தை முன் வைத்தார். குறித்த தீர்மனத்தை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.