முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பது தொடர்பான முடிவினை தமிழக அரசே மேற்கொள்ளலாம் என இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது டெல்லி உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் வரவேற்றுள்ள சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கண்ணீர் பேட்டியளித்துள்ளார்.
ராஜீவ் கொலைக்குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கலாம் என்ற தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விரைவாக விடுதலை செய்திட வேண்டுமென உருக்கமாக தெரிவித்துள்ளார் அற்புதம்மாள்.
முன்னதாக, பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் நெடுநாட்களாக அவரது தாயார் அற்புதம்மாள் எழுவரின் விடுதலையைக்கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.