பற்றிய வீதிகள், வெறிச்சோடிய மட்டு; யுத்த காலத்தை நினைவுபடுத்திய போராட்டம்!

0

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வளம் செறிந்த புல்லுமலை ஊரில் குடிநீரை நிலத்தடியில் இருந்து உறுஞ்சி போத்தல்களில் அடைத்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நோக்கில் காத்தான்குடி தவிசாளரால் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலையை மூடுமாறு கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியநிலையில் இன்று 07/09/2018 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கிய நிர்வாக முடக்கம் ஹர்தால் போராட்டம் நடத்த மட்டக்களப்பு மாவட்ட பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பும் தார்மீக ஆதரவை தெரிவித்திருந்தனர் இன்றய ஹர்தால் கதவடைப்பு நிர்வாக முடக்கம் போராட்டம் பூரண வெற்றி அடைந்துள்ளது.

மட்டுநகர் படுவான்கரைபெருநிலம் எழுவான்கரை பகுதிகள் யாவும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது. ஏறாவூர் பகுதியில் சில பேரூந்து சேவை காலையில் இடம்பெற்ற போதும் வீதிகளில் சிலர் தீயிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர் இதனால் பேருந்து சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன.

படுவான்கரை பெருநிலப்பகுதி பாடசாலை மாணவர்கள் எவரும் எந்த பாடசாலைகளுக்கும் செல்லவில்லை.

சகல வர்தசங்கங்களும் பூரண ஆதரவை வழங்கியது திணைக்களங்களில் அன்றாட பணிகள் நடைபெற பொதுமக்கள் எவரும் செல்லவில்லை.

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை நோயாளர் நலன் கருதி இயங்கியபோதும் வரவு குறைவாகவே காணப்பட்டது.

இன்று நடைபெறும் இந்த ஹர்த்தால் எந்த ஒரு இனத்திற்குகோ மதத்திற்குகோ எதிரான போராட்டமல்ல இது எமது இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிரான போராட்டம் தண்ணீர்ப் பிரச்சனைக்கான போராட்டம் இது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாயத்திற்கு நீர் வேண்டும் என்பதற்கான போராட்டம் இப்படிப்பட்ட இந்த நியாயமான எதிர்கால உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை ஏன் முஸ்லீம்கள் சிலர் இனவாதமாக பார்க்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்றைய இந்த ஹர்த்தால் ஆனது தமிழ் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றி நிற்பதுடன் யுத்தகாலத்தில் இருந்த எழுச்சி மீண்டும் மட்டக்களப்பில் உருவாகியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது இதற்காண காரனம் அங்குள்ள மக்கள் மூம்முனைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதே காரணம் என கூறப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 07.09.2018 அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாவுள்ளது. அத்துடன் இன்று மட்டு நகரில் பிரபல பாடசாலைகளுக்கு சென்ற ஆசிரியர்கள் மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர் பாடசாலை இயங்கவில்லை காணமுடிகின்றது.இரு நூறுக்கும் மேற்பட்ட மீனவ படகுகளில் தொழில் செல்லாமல் நிறுத்தியதையும் காணமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.