பாரத தேசத்துக்கு அகிம்சை போதித்த அகிம்சைக் கடவுள் தியாகி திலீபனுக்கு பறவை காவடி எடுத்து அஞ்சலி ! உணர்ச்சி காணொளி உள்ளே

0

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக மேற்கொண்டுவருகின்றனர்.

திலீபனின் நினைவு நாளையொட்டி இன்று கைதடியிலிருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்தவாறு நல்லூரிலுள்ள நினைவேந்தல் அமைந்துள்ள இடத்தில் நிறைவு செய்துள்ளனர்.

அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல்#இரு_இளைஞர்கள்_தூக்கு_காவடி எடுத்தவாறு நினைவேந்தல் #நினைவிடத்தில்_நல்லூரில்!

Slået op af ILC Tamil Radio i Tirsdag den 25. september 2018

Leave A Reply

Your email address will not be published.