பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த மஹத்-ஐ வெளுத்துக்கட்டிய ரம்யா ! வீடியோ உள்ளே

0

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த மஹத்தை ரம்யா அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது….!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சுமார் கடந்த 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 9 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் வீட்டிற்க்குள் எஞ்சியுள்ளனர். இந்த வாரத்தில் நடைபெற்ற டாஸ்க்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மஹத் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்த போது யாஷிகாவுடன் மலர்ந்த காதல், மும்தாஜுடன் அவர் நடந்து கொண்டவிதம் ஆகியவற்றை பலரும் விமர்சித்து வந்தனர். நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியேறும் போது அவர் மீது யாரும் தனிப்பட்ட முத்திரை குத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மஹத்தை கன்னத்தில் அறைந்து நடிகர் சிம்பு வரவேற்றார். இந்நிலையில் மஹத்துக்கு முன்பே பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய ரம்யாவை மஹத் சந்தித்துள்ளார்.

அப்போது முடியை பிடித்து ரம்யா பாசமாக அவரை அடித்துள்ளார். அதற்கான வீடியோவை, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்ற பழமொழியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா வெளியிட்டுள்ளார். அதில் ‘ஐ மிஸ் யூ மும்தாஜ்’ என்று மஹத் கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதோ அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது…..!

Leave A Reply

Your email address will not be published.