வெட்டிய மீன் தலையை நாய்க்கு எறிய முற்பட்ட போது திடீரெனக் குறுக்கே பாய்ந்த வளர்ப்புப் பூனை குடும்பப் பெண்ணின் விரலைக் கடித்துக் குதறிய சம்பவம் யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்றைய தினம்(01) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கடியுண்ட குடும்பப் பெண் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, கடந்த மாதம் தென்மராட்சிப் பகுதியில் வளர்ப்புப் பூனைகளால் பலர் கடியுண்டுள்ளதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.