முஸ்லீம் உணவகம் நடாத்துவதற்கு முன்னாள் போராளியை தாக்கிய பொலிஸ்! கனகராயன்குளத்தில் கண்டன ஆர்பாட்டம்!

0

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கனகராயன்குளம் வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கனகராயன்குளத்தில் இன்று பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பாதிக்கபட்டவர்களுக்க நீதி கிடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கொத்துறொட்டிக்கு ஆசைபட்டா சிறுமி வயிற்றில் குத்தினீர், சட்டத்தை மீறாதே சண்டித்தனம் செய்யாதே, இதுதானா சிறுவர் உரிமை நல்லாட்சி அரசே பதில் சொல் போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

கனகராயன்குளம் பகுதியில் உணவகம் நாடாத்தும் முஸ்லீம் நபருக்கும் உணவகம் உள்ள காணியை குத்தகைக்கு வழங்கிய உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துமுரன்பாட்டை அடுத்து உணவகம் நடாத்துபவரால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இதயைடுத்து சிவில் உடையுடன் விரைந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பக்கசார்பாக நடந்து கொண்டதுடன் காணியின் உரியமையாளரைத் தாக்கியுள்ளார்.

அதனைத் தடுக்க சென்ற அவரது மனைவியினை தள்ளிவிட்டதுடன், மகளான சிறுமி ஒருவரையும் தாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து, குறித்த உணவகத்தை மூடுமாறு காணி உரிமையாளர் கோரிய போதே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த உரிமையாளர் முன்னாள் போராளியாவார்.

Leave A Reply

Your email address will not be published.