யாழிற்கு முதன்­மு­றை­யாக சகாக்களை அழைத்துச் செல்லும் சுமந்­திரன்

0

நாடா­ளு­மன்ற நிதிக் குழு­வின் கூட்­டம் முதன் முத­லாக நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே நடை­பெ­ற­வுள்­ளது.

இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை கண்­டி­யி­லும் நாளை திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பா­ணத் தி­லும் நடை­பெ­ற­வுள்­ளன.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற பொது­நி­திக் குழு­வின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நிதி விவ­கா­ரங்­க­ளைக் கையாள்­வ­தற்கு இரண்டு குழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. நாடா­ளு­மன்ற பொது நிதிக் குழு மற்­றை­யது கோப்­குழு.

நாடா­ளு­மன்ற பொது நிதிக் குழு, இந்த ஆண்டு சமர்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு – செல­வுத் திட்­டத்தை ஆரா­ய­வுள்­ளது.

இந்­தக் குழு முதன்­மு­றை­யாக நாடா­ளு­மன்­றத்­துக்கு வெளியே கூடு­கின்­றது. கண்­டி­யில் இன்­றைய தின­மும், யாழ்ப்­பா­ணத்­தில் நாளை­யும் கூட்­டங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

மூன்­றா­வது கூட்­டம் மாத்­த­றை­யில் நடை­பெ­றும் என்­றார்.

இவைகள் வெறும் சம்பிரதாய சடங்குகளாக மட்டுமே உள்ளதே அன்றி இதனால் எந்த பயனும் இல்லை என கூறும் அரசியல் அவதானிகள் இவற்றால் இதில் உள்ளவர்கள் மக்கள் பணத்தில் இன்பம் பாண்பது மட்டுமே உண்மை என்பதுடன் இடத்திற்கு இடம் வேறுபடும் உணவுகளை உண்டு ருசிக்கலாமே தவிர வேறு எந்த பயனும் ஆகாது என குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.