யாழ்ப்பாணத்தில் பெண்கள் மட்டுமே உள்ள வீட்டில் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம் ! தொடரும் ரவுடிசம்

0

யாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடிப் பகுதியிலுள்ள இரு பெண்கள் தனித்திருந்த வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்த வாள்வெட்டுக் குழு கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்தச் சம்பவம் நேற்று(16) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி வீட்டில் இருட்டு பெண்கள் மாத்திரம் தனித்திருந்த நிலையில் மோட்டார்ச் சைக்கிளில் வந்த ஆறுபேர் கொண்ட குழு வீட்டிலிருந்த பல பெறுமதியான பொருட்களையும் அடித்துடைத்துக் கடுமையான அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

வாள்வெட்டுக் குழு வீட்டுக்குள் உள்நுழைந்ததையடுத்து வீட்டில் நின்ற இரு பெண்களும் அதிர்ச்சியடைந்ததுடன் அங்கிருந்து ஓடி ஒழிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சமபவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.