லஞ்சத்துக்கு எதிராக முதியவர் கிளிநொச்சியில் வினோத போராட்டம் ! அரச அதிகாரிகளின் செவிகளுக்கு கேட்குமா ?- புகைப்படம் உள்ளே

0

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிபொலிஸ் மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது முதியவர் ஒருவர் வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் ஏறியிருந்தவாறு கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக்கொண்டிந்தார்.இதனால் அங்கு தீடிரென பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவருடன் பேசி அவரை மரத்தில் இறக்கிய போது அவர் கையில் வைத்திருந்த பதாகையில் வேண்டாம் எனும் தலைப்பில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது எங்களுக்கு சேவை செய்வதற்கே, எங்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களுக்கு நாங்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டியது எங்களின் பொறுப்பாகும் எனவும் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் அவருடன் சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.இதனால் அந்த இடத்தில சிறிது பரபரப்பு காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.