வறுமையின் கொடுமையினால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட சிறுமி ! மனதை உருக்கிய தற்கொலை காரணம்

0

முருகண்டியை சோகத்தில் ஆழ்த்திய 14 வயது சிறுமியின் தற்கொலை 31.08.2018
நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமி வறுமை காரணமாகவே உயிரை மாய்த்துள்ளார்.

சிவபாதகலையகம் பொன்னகர் பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமி தனது தாயாரிடம் பாடசாலை செல்வதற்கு வெள்ளை சீருடை புதிதாக தைத்து தருமாறு கேட்டுள்ளார் தாய் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறு அம்மா தைத்து தருகின்றேன் என்று கூறி இருக்கின்றார்.சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுமியின் தாயார் கூலி வேலைக்கு சென்று தான் தன்னுடைய குடும்ப செலவீனங்களை மேற்கொண்டு வருகின்றார். நான்கு பெண் பிள்ளைகள், மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் தாயார் தான் தினக்கூலிக்கு சென்று வருகின்ற 600/= ரூபாய் சம்பளத்தில் குடும்ப வாழ்வை கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

சிவபாதகலையக பாடசாலையில் சிறுமிக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறுகையில் சிறுமி கல்வி கற்பதில் வலு கெட்டிக்காரி எதிர்காலத்தில் ஒரு டாக்டர்ராகும் கனவு அவளுக்குள் இருந்ததாக கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.