வாலி-2 வந்தே ஆக வேண்டும்.. நான் மீண்டும் ஜோடி சேர வேண்டும்;அடம்பிடிக்கும் நடிகை

0

வாலி 2’ படத்தில் அஜீத்துடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன் என்று பிரபல நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

அஜீத் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் ‘வாலி’. இந்தப் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்தப் படம் அஜீத்துக்கு மட்டுமல்ல  நடிகை சிம்ரனுக்கும்  இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மறக்கமுடியாத படம் என்றே கூறலாம். இந்தப் படத்தில் ஒரு அஜீத் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். அஜீத்துக்கு ஜோடியாக சிமரன் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வாலி என் மோஸ்ட் பேவரட் படம். கண்டிப்பாக ‘வாலி’ இரண்டாம் பாகம் உருவாகியே தீரவேண்டும். அந்தப் படத்தில் ஹீரோயினாக யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். அந்தப் படத்தில் அஜீத்துடன் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தாலே போதும்‘ என்று ஜாலியாக பேசியுள்ளார்.

நடிகை சிம்ரன் தற்போது வெளியாகவுள்ள ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். இந்தப் படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.