16 வயதில் கற்பழிக்கப்பட்டேன் ! மனம் திறந்த மொடல் அழகி ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மாடல் அழகியும்  எழுத்தாளருமான பத்மாலட்சுமி 16வது வயதில் கற்பழிக்கப்பட்டேன் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்

சென்னையை பூர்வீகமாக கொண்ட பத்மாலட்சுமி சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் அமெரிக்காவின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தன்னைப் பற்றி எழுதியுள்ளார். அதில் அவர் நான் 16வது வயதில் கற்பழிக்கப்பட்டேன். 23 வயது வாலிபருடன் ‘டேட்டிங்’ல் இருந்தேன். அப்போது தான் கற்பழிக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்.

அந்த நபரும் என்னுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். மிகவும் சோர்வாகவும்  களைப்பாகவும் இருந்ததால் படுக்கையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன். அப்போது அந்த நபர் என்னை கற்பழித்து விட்டார். இதில் ஆண் எந்தவித பாதிப்புக்கும் ஆளாவதில்லை. பெண்ணின் வாழ்க்கையே சீரழிகிறது. எனக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை அப்போது நான் வெளியில் சொல்லவில்லை.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் டொனால்டு டிரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரட் கவான்னா மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து நான் எனக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்தும் எழுத முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.