ஈபிடிபி கட்சியை சேர்ந்த கிளிநொச்சி உறுப்பினர் தினேஸ் என்பவர்மீது, தமிழ் தேசிய உணர்வாளர்களால் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் தமிழ் தேசியத்தை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ் தேசிய உணர்வாளர்களையும் கொச்சைப்படுத்தி வந்துள்ளார்.
அண்மையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து வயதான தாயார் ஒருவரை தாக்க முயற்சிதமை தொடர்பில் ஊடகங்கள் செய்திவெளியிட்டன. அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த கௌர பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையும் தகாத வார்த்தைகளால் அவமானம் செய்துள்ளார்.
இவர், ஊடகவியாளர் என்ற போர்வையில் இருந்து கொண்டு தமிழின உணர்வாளர்களை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். பாடசாலையிலிருந்து துரத்தப்பட்டும், வீட்டிலிருந்து பெற்றோரால் துரத்தப்பட்டும் இவர் வீதியில் நின்ற நிலையில் ஈபிடிபி ஒட்டுக்குழு சந்திரகுமார் இவரை தன் அரசியல் அடியாளாக வளர்த்து வருகிறார்.
சாராயத்திற்கும் சிகரட்டுக்கும் விடுதலையை காட்டிக் கொடுக்கும் இவருக்கு நேற்று செவ்வாய் கிழமை தமிழின உணர்வாளர்கள் பாடம் கற்பிக்கும் முகமாக தாக்கியுள்ளனர். அடி உதவதுபோல அண்ணன் தம்பி உதவார் என்பதை உணர்த்த இவர்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் எனினும் வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறுமளவிற்கு இரத்தக் காயங்கள் வரும் அளவுக்கு தாம் தாக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவர் ஒட்டுக்குழு சந்திரகுமாருக்காக போலி அனுதாபத்தை தேடும் வகையில் வைத்தியசாலையில் சென்று தங்கியிருப்பதாக கூறும் அவர்கள், எதிர்காலத்தில் இவர் திருந்தி நடக்காவிட்டால், தொடர்ந்து அடி மூலம் பாடம் கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இவர் இராணுவத்துடன் இணைந்து காட்டிக் கொடுப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.