அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றியே தீருவேன் ! அங்கயன் அடாவடி

0

வடக்கில் உள்ள ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரினை மத்திய அரசின் முன் மொழிவுடன் மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபை செய்த உருப்படியான திட்டம் ‘அம்மாச்சி’ உணவகம் தான் என பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது வடமாகாண சபையின் திட்டமல்ல மத்திய அரசின் ஊடாக நாட்டின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

அந்த திட்டத்தின் ஊடாக திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்ட உணவகத்திற்கு மத்திய அரசு பெயர் வைக்க முற்பட்ட போது , அதற்கு வடமாகாண சபை இடையூறாக இருந்தமையால் பெயர் வைக்க முடியவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்தவுடன் மத்திய அரசால் முன் மொழியப்பட்ட ‘கொல பொஜன ‘ எனும் பெயரை அல்லது அதற்கு ஏற்ற தமிழ் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.