அரசுப் பேருந்தை ஓட்டிய குரங்கு ! ஓட்டுநர் இடைநிறுத்தம்

0

கர்நாடக மாநிலம் தேவாநாகிரி பகுதியில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்தில் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார் பிரகாஷ். கடந்த வாரம் அவர் பணியிலிருந்த போது பேருந்தில் பயணித்த பயணியொருவர் குரங்கோடு வந்திருக்கிறார்.

பஸ் புறப்பட்டதும் அந்தக் குரங்கு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும் ஸ்டியரிங்கில் கைவத்து தானும் பஸ்ஸை ஓட்ட ஆரம்பித்துள்ளது.

இதனைப் பார்த்து அலட்டிக்கொள்ளாத ஓட்டுனரும் குரங்கை ஸ்டியரிங்கின் மீது உட்கார வைத்து பஸ்ஸை இயக்கியுள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பதற்றமடையத் தொடங்கினர்.

ஆனால், அதனைப் பெரிதுபடுத்தாத ஓட்டுனர் சிரித்தபடியே குரங்கோடு சேர்ந்தே பஸ்ஸை இயக்கியுள்ளார்.

இதனை அங்கிருந்த பயணியொருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த ஓட்டுனரும், நடத்துனரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.