அலரிமாளிகைக்குள் நுழைந்து ரணிலை துரத்துவேன்! விமல் வீரவன்ச

0

ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால் அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கு எந்த வித அதிகாhரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால் மக்கள் ஆதரவை திரட்டி அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெலவும் ரணில் விக்கிரமசிங்க கௌரவாமாக வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.