முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் என்று கூறிய இரண்டு பேர் இன்று மதியம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
அலரி மாளிகையில் இருக்கின்ற சில உபகரணங்களை சோதனை செய்து அவற்றை அப்புறப்படுத்த முற்பட்ட போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இதனையடுத்து அலரி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தலையிட்டு நிலமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
குறித்த இரண்டு பேரும் அவர்களின் அடையாளத்தை ஒப்புவிக்காமலும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்காமலும் உள்நுழைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இருவரினதும் அடையாம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அலரி மாளிகையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.