மது போதையில் பொலிஸ் அதிகாரியை கொலை செய்த பெண் வைத்தியரினால் பெரும் சர்ச்சை ! ஜனாதிபதி கண்டனம்

0

கொழும்பு புறநகர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன மாவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசேட பெண் வைத்தியர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய விபத்தை ஏற்படுத்திய வைத்தியர் டிரான் காவிந்தியாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் குறித்த வைத்தியர் களுபோவில வைத்தியசாலையில் 11ஆம் அறையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு மத்தியில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</எப்படியிருப்பினும் விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு எவ்வித காயமும் இன்றி, சிறைச்சாலைக்கு செல்லாமல் வைத்தியசாலையில் அவர் இருப்பதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய போது வைத்தியர் குடிபோதையில் இருக்கவில்லை என களுபோவில வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் அந்த அறிக்கை போலியானதெனவும், வைத்தியசாலையின் செயற்பாடு தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த பெண் வைத்தியர் ஆண் நண்பர்களுடன் இணைந்து கல்கிஸ்ஸ இரவு நேர விடுதியில் மது அருந்தியுள்ளார் என வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.இந்த விபத்தினால் பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெண் வைத்தியரின் செயற்பாடு தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதியும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பொறுப்பு வாய்ந்த கடமையில் இருக்கும் வைத்தியரின் செயற்பாடு விமர்சனத்திற்கு உரியது. எனினும் மாறுபட்ட மருத்துவ அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இது குறித்து உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.